பிரதேச ச அரசியல்வாதி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு - ALMBNews

Latest

புதிய செய்திகள்

பிரதேச ச அரசியல்வாதி, துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு

 


முல்லேரியா வங்கி சந்தி பகுதியில் இன்று -02- மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் முல்லேரியா பிரதேச சபையின்  உறுப்பினரான சுமுது ருக்ஷான் உயிரிழந்துள்ளார். 

மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேகநபர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து  தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்,  சட்டத்தரணி நிஹால்  தல்துவ தெரிவித்தார். 

உயிரிழந்தவரின் சடலம் முல்லேரியா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

சம்பவத்தில் 42  வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். 

கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.