ஜனாதிபதி பதவியிலிருந்து விலகமுன், பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்குமாறு கோட்டாபயவிடம் அமெரிக்கா வலியுறுத்தியது - ALMBNews

Latest

புதிய செய்திகள்

ஜனாதிபதி பதவியிலிருந்து விலகமுன், பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்குமாறு கோட்டாபயவிடம் அமெரிக்கா வலியுறுத்தியது

 


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதற்கு முன்னர், அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவையும் பிரதமர் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என அமெரிக்கா  கோட்டாவுக்கு அழுத்தம் வழங்கியதாக சுயாதீனப் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேர்ந்த கதி தொடர்பில் தான் மகிழ்ச்சியடையப்போவதில்லை எனவும் தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் விமல் கூறியுள்ளார்.

கோட்டா ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகும்போது அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவையும் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென அமெரிக்கா கோட்டாவிடம் வலியுறுத்தியது. ரணிலை பிரதமர் பதவியிலிருந்து விலக்கியிருந்தால், சபாநாயகரே பதில் ஜனாதிபதியாகச் செயற்பட்டிருப்பார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவின் கொள்ளளவு எவ்வளவு என்பது எமக்கு தெரியும் எனவும் தெரிவித்தார்.

ஒருவேளை பதில் ஜனாதிபதியாக சபாநாயகர் நியமிக்கப்பட்டிருந்தால் நாட்டின் நிலைமை என்னவாகியிருக்கும் என்பது தெரியாது. நாட்டின் தற்போதைய நிலைமைக்கு முன்னாள் நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவும், ஜனாதிபதியின் செயலாளர் பி.பி.ஜயசுந்தரவுமே காரணம் எனவும் தெரிவித்தார்.