டலஸுக்கு ஆதரவளிக்க TNA தீர்மானம், எழுத்துமூலமான உறுதிப்பாடு பெறவும் முடிவு - ALMBNews

Latest

புதிய செய்திகள்

டலஸுக்கு ஆதரவளிக்க TNA தீர்மானம், எழுத்துமூலமான உறுதிப்பாடு பெறவும் முடிவு

 


ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பில் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு நாளைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.


இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் கொழும்பு இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, டலஸ் அழகப்பெரும,ரணில் விக்ரமசிங்கவை ஆதரிப்பதில் தமிழர்களுக்கு உள்ள நன்மைகள்,தீமைகள் தொடர்பில் தீவிரமாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
 
இதனை தொடர்ந்து டலஸ் அழகப்பெருமவை ஆதரிப்பதாக இருந்தால் அவரிடத்தில் எழுத்துமூலமான உறுதிப்பாடு பெறப்பட வேண்டும் என்று கூட்டத்தில் பங்கேற்ற பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்ட நிலையில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறிப்பாக, அரசியல் கைதிகள் விடுதலை, ஆக்கிரமிப்பு பிரச்சினைகள் உள்ளிட்ட உடனடியாக தீர்க்கவல்ல பிரச்சினைகள் தொடர்பில் காலவரையறையுடனான உறுதிப்பாடு அவசியம் என்றும் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டுள்ளது.