இலங்கையின் பொருளாதார வீழ்ச்சிக்கு சீனாவின் கண்மூடித்தனமான கடன்பொறியே காரணம் என அமெரிக்கா குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டை அமெரிக்க புலனாய்வுப் பிரிவான சீஐஏயின் தலைவர் பில் பேர்னஸ் (William J. Burns) , கொலராடோ மாகாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது சுமத்தியுள்ளார்.
சிலங்கையின் இந்த நிலை மற்ற நாடுகளுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சீனாவின் கடன் பொறியில் சிக்கியதன் காரணமாகவே இலங்கை இன்று நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவித்த அவர், சீனா கூடுதல் வட்டிக்கு இலங்கையில் முதலீடு செய்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதோடு சீனாவிடம் கடன் பெற்றுக் கொண்டு முதலீடுகளை செய்தமையே இலங்கையின் பொருளாதாரச் சரிவிற்கான பிரதான காரணி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சில முட்டாள்தனமான பந்தயங்களைச் செய்து அதன் விளைவாக பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகளில் மிகவும் பேரழிவைச் சந்திக்கும் நாடாக இலங்கை மாறியுள்ளது என்றும் பில் பேர்னஸ் தெரிவித்துள்ளார்.