டளஸுக்கு வாக்களிப்பதாக பகிரங்கமாக கூறியவர்கள் அதனைச் செய்யவில்லை - வாசுதேவ கவலை - ALMBNews

Latest

புதிய செய்திகள்

டளஸுக்கு வாக்களிப்பதாக பகிரங்கமாக கூறியவர்கள் அதனைச் செய்யவில்லை - வாசுதேவ கவலை

 


டளஸ் அழகப்பெருமவுக்கு வாக்களிப்பதாக பகிரங்கமாக கூறியவர்கள் கூட அதனை செய்யவில்லை என்பதை காணக்கூடியதாக இருப்பதாகவும் அவர்கள் ஏமாற்றினார்களோ என்ற சந்தேகம் இருப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திற்கு வெளியில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாங்கள் தோல்வியடைந்து விட்டோம். நாங்கள் எதிர்பார்த்த வாக்குகள் கிடைக்கவில்லை. ஏமாற்றபட்டோமோ என்ற சந்தேகம் எனக்கு இருக்கின்றது. இதற்கான காரணத்தை அவர்களிடமே கேட்க வேண்டும். எனினும் அப்படி குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாது.

எவ்வாறாயினும் இனிவரும் காலங்களில் கொள்கையை அடிப்படையாக கொண்டு அரசியலில் ஈடுபடுவேன்.

எமது அணியில் உள்ள 10 கட்சிகள் கொள்கை அடிப்படையிலான அரசியலை முன்னெடுக்கும். எமது அணியில் இருக்கும் அதாவுல்லா ரணிலுக்கு வாக்களிப்பதாக கூறி, வாக்கை அளித்தார்.

எமக்கு வாக்களிப்பதாக வெளிப்படையாக கூறியவர்களில் பெரும்பாலானோர் எமக்கு வாக்களிக்கவில்லை.

எவ்வாறாயினும் சஜித் பிரேமதாசவின் எதிர்க்கட்சி தலைவர் பதவிக்கும் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.