சுயாதீன பாராளுமன்ற அணி 3 ஆக உடைந்ததா..??? - ALMBNews

Latest

புதிய செய்திகள்

சுயாதீன பாராளுமன்ற அணி 3 ஆக உடைந்ததா..???

 


நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அவசரகாலச் சட்டம் மீதான வாக்கெடுப்பில் அரசாங்கத்தில் இருந்து விலகி சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் பெரிய பிளவு ஏற்பட்டிருப்பதை அவதானிக்க முடிந்துள்ளது.

இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியில் அங்கம் வகிக்கும் விமல் வீரவங்ச, அவரது கட்சியை சேர்ந்த நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய காங்கிரஸின் தலைவர்.ஏ.எல்,எம்.அதாவுல்லா, இலங்கை மகஜன கட்சியின் தலைவர் அசங்க நவரத்ன, பிரேம்நாத் சி தொலவத்த ஆகியோர் அவசரகாலச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அதேவேளை அத்துரலியே ரதன தேரர், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, கம்யூனிஸ்ட் கட்சியின் வீரசுமன வீரசிங்க, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண, கெவிந்து குமாரதுங்க, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் உதய கம்மன்பில ஆகியோர் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்லை.

இவர்களை தவிர மேலும் 35 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடந்த நேரத்தில் நாடாளுமன்ற அவையில் இருக்கவில்லை.

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியின் வசந்த யாப்பா பண்டார, உதயன கிரிந்திகொட ஆகியோர் அவசரகாலச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்தனர்.  TW