எரிபொருள் நிலையத்தில் மோதல் - 13 பேர் கைது, 20 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன - ALMBNews

Latest

புதிய செய்திகள்

எரிபொருள் நிலையத்தில் மோதல் - 13 பேர் கைது, 20 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன


 வெல்லவாய நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்த எரிபொருள் தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிலர் போத்தல் மற்றும் கற்களை வீசி தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களுடன் 20 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் இன்று வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.